ETV Bharat / bharat

கோஹினூர் வைரத்தை மீட்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்!

கோஹினூர் வைரத்தை இங்கிலாந்திலிருந்து மீட்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

MEA
MEA
author img

By

Published : Oct 15, 2022, 9:26 PM IST

டெல்லி: ராணி இரண்டாம் எலிசெபத் கடந்த மாதம் காலமானார். அப்போது அடுத்த மன்னர் யார்? ராணி அணிந்திருந்த விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு? என்பது தொடர்பான பல்வேறு விவாதங்கள் எழுந்தன. கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும், ஆங்கிலேயே படையெடுப்பின்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால், கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று(அக்.14) டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கோஹினூர் வைரத்தை மீட்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்த கேள்விக்கு மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் பதிலளித்தது. கோஹினூர் வைரம் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்திடம் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறோம். அதனை மீட்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்" என்று கூறினார்.

ராணி இரண்டாம் எலிசெபத் மறைவைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக தேர்வு செய்யப்பட்டார். அவரது முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சார்லஸின் மனைவி கமிலா ராணி, ராணியாக முடிசூட்டும்போது கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணியக்கூடும் என இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:"கோஹினூர் வைரம் பூரி ஜெகன்நாத பகவானுக்குச் சொந்தமானது" - உரிமை கொண்டாடும் ஒடிஷா அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.