நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் சார்பாக யஷ்வந்த் சின்ஹாவும் , பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரெளபதி முர்முவும் போட்டியிடுகின்றனர்.
நேற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட திரெளபதி முர்மு பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் , அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வருகிறார்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில் மாயாவதி , இந்த முடிவு பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்றோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செல்ல வேண்டும் என்றோ எடுக்கப்படவில்லை , கட்சியின் கொள்கையை மனதில் கொண்டும் நாட்டிற்கு ஒரு ஆதிவாசி பெண் குடியரசு தலைவாராகிறார் என்பதை கருத்தில் எடுக்கப்பட்டதாக மாயாவதி கூறியுள்ளார். மாயாவதியின் இந்த முடிவால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.