கோவையில் முதலமைச்சர் இன்று ஆய்வு
கோவை உள்பட மூன்று மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று(மே.30) ஆய்வு மேற்கொள்கிறார்.
கோயம்பேடு மார்க்கெட் இன்று இயங்கும்
ஊரடங்கில் காய்கறி விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, இன்று (மே.30) கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் இயங்கும் என, கோயம்பேடு மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
இன்று(மே.30) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று ஆலோசனை
தெலங்கானாவில் அமலிலுள்ள முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில், பிற்பகல் 2 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
கோவா தனி மாநிலமான நாள்
கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலமாகவும் திகழ்கிறது. கோவா, கடந்த 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி இந்தியாவின் தனி மாநிலமானது.