ETV Bharat / bharat

மொரிசியஸ் பெருந்தலைவர் அனிரூத் குகநாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல் - அனிரூத் குகநாத்துக்கு பத்ம விபூஷண் விருது

மொரிசியஸ் முன்னாள் அதிபரான அனிரூத் குகநாத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனிரூத் குகநாத் மறைவு
அனிரூத் குகநாத் மறைவு
author img

By

Published : Jun 4, 2021, 10:54 PM IST

மொரிசியஸ் நாட்டின் முன்னாள் அதிபரான அனிரூத் குகநாத் (Anerood Jugnauth) இன்று (ஜூன்.04) காலமானார். 91 வயதான இவர் இரண்டு முறை அதிபராகவும், ஆறு முறை பிரதமராகவும் இருந்துள்ளார். 2020ஆம் ஆண்டில் இவரை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு, அனிரூத் குகநாத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது.

பிரதமர் மோடி இரங்கல்

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் தலைவராகத் திழந்த உயரிய தலைவரான அனிரூத் குகநாத் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது மகனும் மொரிசீயஸ் பிரதமருமான பிரவிந்த் குகநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது இரங்கலைத் தெரிவித்தேன். இந்திய மொரிசியஸ் உறவை கட்டமைத்தவர் அனிரூத் குகநாத்" என இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்,

மேலும், அவரது மறைவை நினைவுகூறும் விதமாக இந்திய அரசு சார்பில் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: உயர்க்கல்விக்காக 3 மணி நேரத்தில் 37 லட்ச ரூபாய் திரட்டிய இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.