ETV Bharat / bharat

புதுச்சேரியில் ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. பேரணி - Appeal to Puducherry Chief Secretary

புதுச்சேரியில் ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Aug 2, 2022, 9:55 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமல் நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாதந்தோறும் விளிப்புநிலை மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அரசு அறிவித்தும் ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதாகக் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூ. பேரணி
மார்க்சிஸ்ட் கம்யூ. பேரணி

இதனால், ரேஷன் அட்டை உள்ள பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் முற்றிலுமாக தடைப்பட்டிருப்பதாகவும், அருகேயுள்ள தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணொய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் இதேபோல், ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி தலைமை செயலக காத்திருப்பு போராட்டத்தை புதுச்சேரி மாநில மார்க்கிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் இன்று (ஆக.2) பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக தலைமை செயலகம் நோக்கி சென்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனிடையே அவர்களை நேரு வீதி மற்றும் மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் முக்கிய வணிக நிறுவனஙகள் நிறைந்த நேரு வீதியில் தர்ணாப்போராட்டத்தில் அமர்ந்து தலைமை செயலாளர் வரும் வரை செல்லமாட்டோம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், நகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும், புதுச்சேரி தலைமை செயலரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் அவர்கள் சந்தித்து விட்டு திரும்பும்வரை ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் செஸ் போர்டு போல் ஒரு டீக்கடை - குவியும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.