அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று பல்வேறு கட்சித் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அதில், முன்னாள் அமைச்சர் (காங்கிரஸ்) ராஜ் குமார் வெர்கா, ஸ்வரூப் சிங்லா பர்னாலா (அகாலிதளம்) ஆகிய கட்சித் தலைவர்கள் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
அவர்களைத் தொடர்ந்து, பல்பீர் சித்து, குர்பீரித் சிங் கங்கர், ஷியாம் சுந்தர் அரோரா ஆகியோரும் முக்கியமானவர்கள். முன்னதாக, சுனில் ஜகார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் தொண்டர்கள் முதல், நிர்வாகிகள் வரை பாஜகவில் இணைவது அதிகரித்து காணப்படுகிறது.
அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மியிடம் படுதோல்வியடைந்தது. பகவந்த் மான் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி 90க்கும் மேற்பட்ட இடங்களில் பெருவாரியான வெற்றியை பதிவு செய்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி!