ETV Bharat / bharat

மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு - கர்நாடகா ஏடிஜிபி விளக்கம்

மங்களூருவில் நடந்த ஆட்டோ வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி ஷாரிக்கிற்கு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் தெரிவித்துள்ள்ளார்.

Etv Bharatமங்களுர் ஆட்டோ வெடிகுண்டு வழக்கு - கர்நாடகா ஏடிஜிபி விளக்கம்

author img

By

Published : Nov 21, 2022, 4:35 PM IST

மங்களூரு: மங்களூருவில் கரோடி அருகே சனிக்கிழமை(நவ-19 ) சென்ற ஆட்டோ வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட ஷாரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் உறுதிபடுத்தியுள்ளார்.

மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில், ‘குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரிக் தற்போது பேசும் நிலையில் இல்லை. அவரது குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஷாரிக் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. மங்களூரு, மைசூர், ஷிவ்முகா ஆகிய நகரங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த ஷாரிக் முன்னதாக ஷிவ்முகாவில் நடந்த கலவரத்தில் சம்பந்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. தற்போது என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்’ என ஏடிஜிபி தெரிவித்தார்.

மேலும் ’ஆகஸ்ட் 15ஆம் தேதி ஷிவ்முகாவில் நடந்த கலவரத்துக்குப் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய ஷாரிக் கோயம்புத்தூர் மற்றும் கேரளாவுக்குச் சென்றுள்ளார். பின்னர் பிரேமராஜ் என்ற பெயரில் போலியாக ஆதார் அட்டை எடுத்துள்ளார். மைசூரில் உள்ள ஷாரிக்கின் வாடகை வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வழக்கில் பலருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என ஏடிஜிபி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் புருஷோத்தமனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும், பயங்கரவாதியுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஏடிஜிபி அலோக் குமார் கூறினார்.

இதையும் படிங்க:மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு விவகாரம்: வெளியான புதிய தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.