ETV Bharat / bharat

உயிரியல் பூங்கா பட்டியலில் முதலிடம் பிடித்த கர்நாடகாவின் பிலிகுலா உயிரியல் பூங்கா! - இனப்பெருக்கம்

நாட்டின் 17 பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான மங்களூருவின் பிலிகுலா உயிரியல் பூங்கா, விலங்குகள் வளர்ப்பில் நாட்டிலேயே முதலிடத்திற்குரிய பெருமையைப் பெற்றுள்ளது.

Mangalore's Pilikula Zoo is top in the country in terms of breeding
உயிரியல் பூங்கா பட்டியலில் முதலிடம் பிடித்த பிலிகுலா உயிரியல் பூங்கா
author img

By

Published : Jun 24, 2023, 10:52 PM IST

மங்களூரு(கர்நாடகா): மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பதற்குப் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை முன்னிறுத்தி சார்லஸ் டார்வின் தகவமைந்த தப்பிப் பிழைத்த கோட்பாட்டினை அறிமுகப்படுத்தினார். இன்றளவிலும் சுற்றுச்சூழலை சமநிலைப் படுத்துவதற்காகப் பின்பற்றப்படும் கோட்பாடுகளில் இந்த கோட்பாடு முக்கியம் வாய்ந்துள்ளது. சுற்றுச்சூழல் சமநிலைப் பெற மனிதர்களின் வளர்ச்சி மட்டும் எந்த நிலையிலும் நீடிக்காத நிலையில் மனிதனின் வளர்ச்சி குறிப்பிட்ட காலம் வரை இயற்கைக்கு புறம்பாகவே கண்டறியப்பட்டது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற திருக்குறளுக்கேற்ப மனிதனின் வீரியம் காணாத வளர்ச்சியினால் உலகில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் அழியும் விளிம்பு நிலையினைச் சந்திக்க நேர்ந்தது. அறிவியல் முன்னேற்பாடுகள் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தினாலும் காட்டின் வளர்ச்சியை மறைத்தது. இது ஒருபுறம் இருக்க காட்டு விலங்குகள் பல கொள்ளையார்களால் சூறையாடப்பட்டு வெளிநாடுகளுக்குச் சதைகளாலும் உருப்புகளாகவும் பல கோடி ரூபாய்களாக விற்கப்பட்டது.

இதனால், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் அழியும் தருவாயினைக் கண்டது. அழியும் விளிம்பில் இருக்கும் பறவை மற்றும் விலங்குகளை தேசிய பறவை அல்லது தேசிய விலங்கு என அறிவித்தாலாவது அவை காப்பாற்றப்படும் என்னும் அவலநிலைக்குத் தள்ளப்பட்ட சூழ்நிலைகளும் நீடித்தன. 1970-க்குப் பின்னர் இந்த அவல நிலைகளிலிருந்து மீளும் விதமாக வன உயிர்களைப் பாதுகாக்கும் விதமாக சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, வன விலங்குகளுக்கு தீங்கு இளைப்போருக்கு தண்டனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதன் பிறகே வனவிலங்குகளைப் பாதுகாக்கும் விதமாக இந்தியாவில் வனவிலங்கு பூங்காக்கள் கொண்டுவரப்பட்டன. இதுவரை இந்தியாவில் 164 உயிரியல் பூங்காக்கள் அரசு அங்கீகாரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் 17 உயிரியல் பூங்காக்கள் அதிக பரப்பளவு கொண்டு சிறப்பந்தஸ்தைக் கொண்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு உயிரியல் பூங்காவிலும் விலங்குகளுக்கான தனித்தன்மைப் பெற்று ஆராய்ச்சி, வளர்ச்சி, இனப்பெருக்கம் என தனித்தனியாக சிறந்து விளங்குகின்றன.

இந்த வரிசையில் மங்களூருவின் பிலிகுலா உயிரியல் பூங்கா 150 ஏக்கர் பரப்பளவு கொண்டு வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தில், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இனப்பெருக்கத்திற்காக மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரியல் பூங்காவில், இதுவரை புலி, ஓநாய், சிங்கம், சிறுத்தை, மான்,முதலை மற்றும் பறவைகள், என 1440 விலங்களின் இனப்பெருக்கம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறவை இனங்களில் 475-க்கும் மேற்பட்ட பறவைகளும், புலி இனங்களில் 15க்கும் மேற்பட்ட புலிக்குட்டிகளும், 30க்கும் மேற்பட்ட டோல் என்ற சிறப்பு வகைகளைச் சார்ந்த ஓநாய்களும் எனப் பல்வேறு விலங்குகள் பிலிகுலா உயிரியல் பூங்காவில் இனப்பெருக்கம் செய்துள்ளது. கூடுதல் சிறப்பாக நாட்டிலேயே முதல்முறையாக அறிவியல் முறையில் ராஜ நாகத்தின் இனப்பெருக்கம் நடைபெற்ற சாதனையையும் பெற்றது. இனப்பெருக்கத்தின் மூலம் 180க்கும் மேற்பட்ட ராஜ நாகங்கள் உயிர்பெற்ற நிலையில், 50 ராஜ நாகங்கள் பிற உயிரியல் பூங்காவிற்கும், 175 ராஜ நாகங்கள் காட்டுக்குள்ளும் விடப்பட்டுள்ளன என பிலிகுலா உயிரியல் பூங்கா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பிலிகுலா உயிரியல் பூங்காவின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “ இந்த உயிரியல் பூங்காவில் 120-க்கும் மேற்ப்பட்ட இனங்கள் இருக்கின்றன. அதில் 40-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழியும் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய உயிரினங்கள். புலி மற்றும் ராஜ நாகங்களின் இனப்பெருக்கம் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாக கருதப்படுகின்றன.

இதுவரை 180 ராஜ நாகங்களின் குட்டிகள் அறிவியல் முறையில் பிறப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவைகளுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. காட்டின் முழுத் தன்மைகளை பெறும் வடிவில், அனைத்து வனஉயிரினங்களுக்கு ஏற்ற வகையில் இந்த உயிரினங்கள் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளதால் இனப்பெருக்கம் விலங்குகளின் இயல்பை பாதிக்காத வகையில் அமைகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.