ETV Bharat / bharat

கர்நாடகா மாநிலத்தில் தோன்றிய காக்கி துணியின் கதை!

author img

By

Published : Nov 14, 2022, 10:42 PM IST

இந்தியா மற்றும் பல நாடுகளில் காவல்துறையினர் அணியும் சீருடையின் நிறமான காக்கி நிறம் கர்நாடகா மாநிலத்தில்தான் முதலில் தோன்றியது.

Etv Bharatகர்நாடகா மாநிலத்தில் தோன்றிய காக்கி நிறத்தின் கதை

மங்களூரு(கர்நாடகா): இந்தியா மற்றும் பல நாடுகளில் பணி புரியும் காவல் துறையினரின் சீருடை காக்கி நிறமாகும். இந்த காக்கி துணி எப்படி உருவானது என்பது குறித்து நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாமல்தான் உள்ளது. மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டில் உள்ள மாநிங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினரின் சீருடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 'ஒரே நாடு-ஒரே சீருடை' கொள்கை அமலுக்கு வரும் எனவும் பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார்.

இதன் அடிப்படையில் காக்கி துணி உருவான இடம் குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகி உள்ளது. இயல்பாகவே காக்கி நிறத்திற்கு (வெளிர் மஞ்சள்-பழுப்பு நிறம்) அனைத்து இடங்களிலும் மரியாதை இருப்பது உண்மையாகும். காவல் துறையைத் தவிர, பல்வேறு அரசுத் துறைகளிலும் காக்கி நிற சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய காக்கித் துணி முதன்முதலில் கர்நாடகா மாநிலம், மங்களூரில் உருவானது. இந்த நிறத்தை மங்களூரு தான் உலகிற்கே அறிமுகம் செய்தது.

காக்கி துணியின் வரலாறு: காக்கி துணி முதன் முதலில் கர்நாடகாவில் கடலோரத்தில் அமைந்து உள்ள மங்களூரில் தான் தயாரானது. அங்குள்ள பால்மாதாவில் உள்ள நெசவுத் தொழிற்சாலையில் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. 1834 இல், பாஷேல் என்ற மிஷனரி அமைப்பு மங்களூருக்கு வந்தது. இந்த அமைப்பு 1844ஆம் ஆண்டு பால்மாதாவில் ஒரு நெசவுத் தொழிற்சாலையைத் தொடங்கியது.

இதனையடுத்து 1852ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் எல்லர் என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் காக்கி நிறத்தையும், துணியையும் உருவாக்கினார். முந்திரியின் தோல் மற்றும் பட்டையிலிருந்து எடுக்கப்பட்ட சாறைக் கொண்டு காக்கி நிறம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1860ஆம் ஆண்டில் முதன் முதலில் கெனாரா மாவட்டத்தில் காவல்துறையின் சீருடையாக இந்த காக்கி துணி அமலுக்கு வந்தது.

மெட்ராஸ் மாகாண ஆளுநராக இருந்த ராபர்ட் பிரபு, மங்களூரில் உள்ள நெசவுத்தொழிற்சாலைக்கு சென்றபோது காக்கி நிறத் துணியால் அதிகம் கவரப்பட்டார். அவர் மெட்ராஸ் சென்று ஆங்கிலேய அரசுக்குக் கடிதம் எழுதி, சென்னை மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் வீரர்கள் சீருடை அணிய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

பிரிட்டிஷ் வீரர்களின் சீருடை: ராபர்ட் பிரபுவின் பரிந்துரையை பிரிட்டிஷ் அரசு ஏற்று, சென்னை மாகாண வீரர்களின் சீருடையை காக்கி நிறத்திற்கு மாற்றியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிட்டிஷ் வீரர்களுக்கும் காக்கியை சீருடையாக மாற்ற ராபர்ட் பிரபு பரிந்துரைத்தார். அதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. இதன் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரிட்டிஷ் வீரர்களுக்கு காக்கி சீருடைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

இதையும் படிங்க:HBDNehru: மனித மாண்புகளை மகளுக்கு கடிதம் மூலம் கற்றுக்கொடுத்த நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.