ராகியைக் கையில் பிடிப்பதே கடினமான ஒன்று. ஆனால், அதனைத் துல்லியமாக எண்ணி கர்நாடக இளைஞர் ஒருவர், சாதனைப் படைத்துள்ளார்.
மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின், சிவமொகாவில் பி.காம் படித்துவருகிறார். ஆரம்பத்தில் பொறியியல் படிப்பை சச்சின் பாதியில் விட்டதால், அவரது பெற்றோர் கோவமாக இருந்துள்ளனர். ஆனால், தற்போது மகனைக் கண்டு பெருமைப்படும் தருணத்தில் உள்ளனர்.
அவர், மூன்று லட்சத்து 76 ஆயிரத்து 83 ராகிகளை, 146 மணி நேரம் 30 நிமிடங்களில் எண்ணி சாதனைப் படைத்துள்ளார். ஒற்றை ராகி விதைகளைக் கையில் பிடிப்பது மிகவும் கடினம்.
ஆனால் சச்சின் 1 கிலோ ராகியை எண்ணி மிகுந்த பொறுமையுடன் தனது சாதனையைப் பதிவுசெய்துள்ளார். இது குறித்து இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சச்சினின் சாதனையைக் கவுரவிக்கும்விதமாக அவருக்குப் பதக்கமும், கடிதத்தையும் கொரியரில் அனுப்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக, இதனை நிகழ்வாக அலுவலர்கள் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக சிட்டுக்குருவி நாள்: குருவிக் கூண்டை பொருத்திய தமிழிசை!