ETV Bharat / bharat

ஐசிசி மகளிர் தரவரிசை - 8வது இடத்தை தக்க வைத்து கொண்ட மந்தனா! சறுக்கிய கோஸ்வாமி - ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் , ஒரு நாள் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 8வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜூலான் கோஸ்வாமி ஒரு இடம் சறுக்கி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

Mandhana
மந்தனா
author img

By

Published : Jun 21, 2022, 7:55 PM IST

இந்தாண்டு விளையாடிய 9 ஆட்டங்களில் ஸ்மிருதி மந்தனா ஒரு சதம் உட்பட 411 ரன்கள் குவித்து , பேட்ஸ்மேன் தரவரிசையில் 8வது இடத்தை தக்க வைத்து கொண்டார். உலக கோப்பை தொடரில் கலக்கிய ஆஸ்திரேலியாவின் அலிசா ஹெய்லி முதலிடத்திலும் மற்றும் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜென் ஜோனாசென் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூலான் கோஸ்வாமி 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ள போதிலும் , அவர் ஒரு இடம் சறுக்கி 6ஆவது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அயபோங்க காக்கா 5வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி ஷர்மா 7வது இடத்தில் நீடிக்கிறார்.

இதையும் படிங்க: அஷ்வினுக்கு கரோனா பாதிப்பு! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.