ETV Bharat / bharat

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இன்றுமுதல் கட்டாயம் - தங்க நகை

டெல்லி: தங்க நகையின் தரத்தைக் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்றுமுதல் (ஜூன் 16) கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தங்க நகை
தங்க நகை
author img

By

Published : Jun 16, 2021, 9:15 AM IST

தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில், இந்தியாவிற்கு முக்கிய இடமுண்டு. இங்கு தங்கத்தின் தரத்தைக் கண்காணிக்க 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுவருகிறது.

ஏன் ஹால்மார்க் முத்திரை?

பல நகைக்கடைகளில் வாங்கப்படும் தங்கம் சுத்த தங்கமாக இருப்பதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்க, இந்தியத் தர நிர்ணய கழகத்தின் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற நகைகளை விற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் இந்தப் புதிய விதி இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18, 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும்.

ஹால்மார்க் முத்திரை விலக்கு

ரூபாய் 40 லட்சம் வரை ஆண்டு நிகர லாபம் கொண்ட நகைக்கடைகளுக்கு கட்டாய ஹால்மார்க்கிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையின் மூலம் குறைந்த தரத்தில் தங்க நகைகள் விற்கப்படுவது நிறுத்தப்படும். தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவர் என இந்தியத் தர நிர்ணய கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய முறையை கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்த வேண்டும் என, 2019ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக, தாமதமாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.