ETV Bharat / bharat

முடி வெட்ட சென்ற பெண்ணிற்கு ரூ.2 கோடி வழங்கிய நிர்வாகம்

தனக்கு தவறாக முடி திருத்தம் செய்ததாக கூறி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணிற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

முடிவெட்ட சென்ற பெண்ணிற்கு ரூ.2 கோடி வழங்கிய நிர்வாகம்

author img

By

Published : Sep 24, 2021, 3:06 PM IST

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் 2018ஆம் ஆண்டு தனது முடியை திருத்திக் கொள்வதற்காக ஐடிசி மவுரியா விடுதியிலுள்ள அழகு நிலையத்துக்குச் சென்றார். வழக்கமாக அப்பெண்ணுக்கு முடி திருத்தும் நபர் இல்லாததால், வேறு ஒருவர் அப்பெண்ணுக்கு முடி திருத்தம் செய்தார்.

தனது நீண்ட கூந்தலில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் முடியை வெட்டுமாறு அப்பெண் கூறினார். ஆனால், முடி திருத்தும் நபரோ அப்பெண்ணின் மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல வெட்டினார். முடி திருத்தப்பட்டதும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார்.

செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த நிர்வாகம், முடி திருத்தியதற்குப் பணம் வேண்டாம் எனக் கூறினர். அத்துடன், அப்பெண்ணின் முடி வளர்வதற்கான சிகிச்சை ஒன்றையும் அளித்துள்ளனர். ஆனால், அந்த சிகிச்சையில் அப்பெண்ணின் முடி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கிய நிர்வாகம்

இதனால் மனமுடைந்த அப்பெண், தனக்கு இழப்பீடு வழங்க கோரி நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தை நாடினார். இவரது வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே. அகர்வால் தலைமையிலான அமர்வு, “தனது முடியை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சொகுசு ஹோட்டலில் உள்ள முடி திருத்தக் கடைக்கு அப்பெண் அதிகளவில் பணத்தை செலவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணின் நீண்ட கூந்தல் அதிகளவில் வெட்டப்பட்டதுடன், முடியும் பாதிப்புக்குள்ளாகி, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தனது பணியையும் அப்பெண் இழந்துள்ளார். எனவே தவறான முடி திருத்தம் செய்த காரணத்தால், கடை நிர்வாகம் அப்பெண்ணுக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாய் மீதான பேரன்பின் வெளிப்பாடு: பிஸ்னஸ் கிளாஸ் முழுவதையும் புக் செய்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.