ETV Bharat / bharat

பாலியல் சேட்டிங் மூலம் பணம் சம்பாதிக்குமாறு மனைவியை துன்புறுத்திய கணவர்

பணத்திற்காக கட்டிய மனைவியை பாலியல் ரீதியிலான வீடியோ கால் சேட்டிங் செய்யுமாறு வற்புறுத்தியும், தன் நண்பர்களுடன் படுக்கையை பகிரக் கோரியும் கணவன் துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல்
பாலியல்
author img

By

Published : Dec 27, 2022, 10:54 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ குடும்ப நீதிமன்றத்திற்கு வித்தியாசமான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் கூறியதாவது, "லக்னோவைச் சேர்ந்த பெண், தன் கணவருக்குத் தெரியாமல் பாலியல் ரீதியிலான வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யும் செயலி மூலம் மாதந்தோறும் நல்ல தொகையை வருவாயாக ஈட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், செயலி மூலம் இளைஞருடன், பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறிய நிலையில், பெண்ணை அரை நிர்வாணத்துடன் வீடியோ கால் செய்யுமாறு இளைஞர் கேட்டுள்ளார். பழகிய நபர் தானே என்று அந்த பெண்ணும் அரை நிர்வாணமாக வீடியோ கால் செய்துள்ளார். அதைப் பதிவு செய்து கொண்ட இளைஞர், பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

பணம் தராவிட்டால் அவருடைய கணவருக்கு வீடியோவை அனுப்பி விடுவதாக இளைஞர் மிரட்டியுள்ளார். இளைஞரின் மிரட்டலை அந்தப் பெண் பொருட்படுத்தவில்லை. இதனால் கோபமடைந்த இளைஞர் அந்த பெண்ணின் கணவருக்கு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

வீடியோவை கண்ட கணவரும் கொதித்து எழாமல், இதேபோல் பலருடன் வீடியோ கால் மூலம் பணம் சம்பாதித்து தருமாறு பெண்ணை துன்புறுத்தி உள்ளார். மேலும், தனது வங்கிக் கணக்குகளை கணவர் முடக்கியதாகவும், அவரது நண்பர்களுடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு மிரட்டி துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதனால், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதேநேரம் விவகாரத்து வழங்க கணவர் மறுத்து வரும் நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபரிமலை கோயிலுக்கு 39 நாட்களில் சுமார் ரூ.223 கோடி வருவாய்; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.