குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று (ஏப். 8) 66 வயது மூதாட்டியை இளைஞன் ஒருவன் நடுரோட்டில் கத்தியால் குத்துவிட்டு தப்பியோடினான். ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால், மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில், பெற்ற மகனால் மூதாட்டி கொலை செய்யப்பட்டதும், இந்த சம்பவம் மூதாட்டி வாக்கிங் செல்லும்போது நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் தனது மனைவி, பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் இளைஞர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் தோழிகளுடன் விஷம் குடித்த காதலி!