ETV Bharat / bharat

குடிபோதையில் மண்வெட்டியால் 3 பேரை கொலை செய்த இளைஞர் - jharkhand drunk man kills relative

ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் உறவினர்கள் 3 பேரை மண்வெட்டியால் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் மண்வெட்டியால் 3 பேரை கொலை செய்த இளைஞர்

author img

By

Published : Aug 22, 2022, 6:11 PM IST

டேராடூன்: ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் நேற்றிரவு(ஆகஸ்ட் 21) பிட்னா முண்டா (65), அவரது மகன் சுதா முண்டா ( 25), உறவினர் விகாஸ் மஹ்தோ (27) ஆகிய மூவரும் மண்வெட்டியால் சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் குந்தி போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த கொலைகளை குந்தி பகுதியை சேர்ந்த ஹேமந்த் பூர்டி என்பவர் செய்துள்ளார். இவர் உயிரிழந்த பிட்னா முண்டாவின் நெருங்கிய உறவினராவார். இந்த சம்பவத்தின்போது அவர் மது அருத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மூவரையும் மண்வெட்டியால் கொலை செய்துவிட்டு அங்கியே அமர்ந்திருந்துள்ளார்.

இதைக்கண்ட உறவினர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு எங்களுக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் நாங்கள் உடல்களை மீட்டோம். அதோடு ஹேமந்த் பூர்டியையும் கைது செய்துள்ளோம். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமித்ஷாவின் செருப்புகளை கையில் எடுத்துச்சென்ற பாஜக தலைவர்... இணையதளத்தில் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.