ETV Bharat / bharat

வேறொரு பெண் மீது ஆசை - எச்.ஐ.வி. தொற்றை மனைவிக்கு செலுத்திய கணவர் கைது

author img

By

Published : Dec 19, 2022, 10:42 PM IST

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இடையூறாக இருப்பதால், எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தத்தை முதல் மனைவியின் உடலில் செலுத்தி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

எச்.ஐ.வி.
எச்.ஐ.வி.

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், சரண். இவரது மனைவி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில் கூறியிருப்பதாவது, சரணுக்கும், தனக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது.

வரதட்சணை கேட்டும், ஆண் குழந்தை பெற்றுத் தராததை குத்திக் காட்டியும் சரண் அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும், இதற்கிடையே தான் மீண்டும் கருவுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், சரணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், தன்னை விவாகரத்து செய்து விட்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சரண் திட்டமிட்டதாகவும் பெண் தெரிவித்துள்ளார். விவாகரத்து செய்ய சரியான காரணம் தேவைப்பட்ட நிலையில், உடல் நிலை பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனக்கு ரத்தம் செலுத்தியதாகப் பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது, தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது கண்டறிந்ததாகவும், எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தத்தை தன் உடலில் செலுத்தி சரண் கொல்ல முயன்றதாகவும் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து சரணிடம் கேட்டபோது தகாத முறையில் பதிலளித்ததாகவும், இதனால் கருவில் உள்ள குழந்தையும், தானும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பெண் புகாரில் கூறியுள்ளார். வழக்குப்பதிந்த போலீசார் சரணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அரிய நோயால் தவித்த வங்கதேச குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.