ஜங்கான்: தெலங்கானா மாநிலம், ஜங்கான் மாவட்டத்தில் உள்ள பச்சன்னபேட்டாவில் பூபால் ரெட்டி(38) என்பவர் நேற்று(நவ.3) மாலை மதுக்கடைக்குச்சென்றார். மதுவை வாங்கிக்கொண்டு கடைக்குப் பக்கத்தில் இருந்த பாருக்கு சென்றார்.
மதுவுக்கு சைட் டிஷ்ஷாக ஏதாவது சாப்பிட நினைத்து, ஆம்லெட்டை ஆர்டர் செய்தார்,பூபால் ரெட்டி. ஆம்லெட் வந்தவுடன் மதுவைக்குடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் மதுவைக்குடித்துவிட்டு, ஆம்லெட்டை எடுத்து வாயில் போட்டார். அந்த ஆம்லெட் தொண்டையில் சிக்கியதாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து பார் மேலாளர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:பெற்றோரையும், குழந்தைகளையும் கொலை செய்தவர் தற்கொலை