ETV Bharat / bharat

முன்னாள் காதலனை வீட்டுக்கு அழைத்து பாம்பை விட்டு கொலை செய்த காதலி.. நடந்தது என்ன? - மஹி

இளம்பெண் ஒருவர் தனது புதிய காதலுக்கு தடையாக இருந்த 32 வயதான முன்னாள் காதலனை விஷப்பாம்பை கொண்டு கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 19, 2023, 1:16 PM IST

Updated : Jul 19, 2023, 1:30 PM IST

ஹால்த்வானி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமணத்திற்கு தடையாக இருந்ததாக முன்னாள் காதலனை காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் ஓய்வதற்குள் உத்ரகாண்ட் மாநிலத்தில் புதிய காதலுக்கு தடையாக இருந்த முன்னாள் காதலனை வீட்டிற்கு வரவழைத்து பாம்பை கொண்டு கடிக்க வைத்து காதலி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ராம்பூர் சாலை ஓரம் நின்ற காரில் இருந்து இறந்த நிலையில் 32 வயதான ஒருவரின் உடல் போலீஸாரால் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் ராம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஷோரூம் தொழிலதிபரான அங்கித் சௌஹான் என்பது தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் அவரின் இரண்டு கால்களிலும் பாம்பு கடித்த அடையாளங்கள் இருந்துள்ளன.

இதனை தொடர்ந்து போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. தொடர்ந்து அவரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கித் சௌஹானின் சகோதரி, இஷா சவுகான் கடந்த ஜூலை 14ஆம் தேதி தனது சகோதரர் மஹி என்ற பெண்ணை காண சென்றதாகவும் அதன் பிறகு அவரை இறந்த நிலையில்தான் காணப்பட்டார் எனவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கித் சௌஹானின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோரபதாவ் பகுதியைச் சேர்ந்த மஹி என்ற பெண்ணும் அங்கித் சௌஹானும் நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு இடையே மஹிக்கு தீப் காந்த்பால் என்ற நபருடன் புதிதாக காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு அங்கித் சௌஹான் இடையூராக இருப்பார் என நினைத்த மஹி, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால் கொலை செய்தால் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் உதம் சிங் நகரைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரின் உதவியை நாடிய மஹி விஷப்பாம்பை கொண்டு கடிக்க வைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி இரவு அங்கித் சவுகானை தனது வீட்டிற்கு அழைத்த மஹி பாம்பு பிடிப்பவரின் உதவியுடன் அங்கித் செளகானை கொடிய விஷம் கொண்ட நாகபாம்பை விட்டு கடிக்க வைத்துள்ளார். பாம்பு கடித்ததில் உடலில் விஷம் ஏறி அங்கேயே மயங்கி விழுந்த அங்கித் செளகானை தனது வீட்டின் பணிப்பெண் உதவியுடன் காரில் ஏற்றிக்கொண்டு கோலா பைபாஸ் சாலையோரம் அந்த காரை நிறுத்திவிட்டு தப்பியுள்ளார் மஹி. அங்கித் செளகானின் பிரேத பரிசோதனையில் அவர் பாம்பு கடித்துதான் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாம்பாட்டி ராம்நாத்தை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளியான மஹி மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது காதலன் தீப் காந்த்பால், பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் புதிய காதலை தக்க வைத்துக்கொள்ள முன்னாள் காதலனை இளம்பெண் கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி; 5 பேர் கைது, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

Last Updated : Jul 19, 2023, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.