கொல்கத்தா: இடைத்தேர்தல் தன்னை மாபெரும் வெற்றிபெறச் செய்த பவானிபூர் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 54 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தி பவானிபூர் தொகுதியில் வென்ற மம்தா பானர்ஜி, இந்த இடைத்தேர்தலில் அதே தொகுதியில் 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 2021 சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சோபன்தீப் சட்டோபாத்யாய் இதே தொகுதியில் 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மம்தா இடைத்தேர்தலில் நிற்பதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், மக்கள் மம்தாவுக்கு மாபெரும் வெற்றியை தந்துள்ளனர். வெற்றி உறுதியான பின் தனது இல்லத்தை விட்டு வெளியே வந்த மம்தா, பவானிபூரில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவுதான், இந்த முறை வாக்களித்தவர்கள் சதவீதமும் குறைவுதான். ஆனால், இந்த வெற்றி பவானிபூரில் எப்போதும் பேசப்படும். எந்த வார்டிலும் எங்களுக்கு தொய்வு இல்லாமல் இருந்ததே சவலான விஷயம். பவானிபூர் பரப்பளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அதன் அரசியல் வட்டம் பெரியது. சதித்திட்டம் தீட்டிய எதிர்க்கட்சியினருக்கு, பவானிபூர் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பவானிபூர் இடைத்தேர்தல் - அசுர வேட்டையாடிய மம்தா பானர்ஜி