டெல்லி: மாநிலங்களவையில் இன்று (பிப்.8) மோடி பேசியதை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியபோது, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பிரதமர் மோடியின் உரையை மறுத்த காங்கிரஸ் எம்பிக்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மல்லிகார்ஜுன கார்கே மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் கார்கேவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் 'மோடியை விமர்சிக்காதே' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கார்கே காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளை அழைத்து மரியாதை செய்யுங்கள் - மோடியிடம் கோரிக்கை வைக்கும் ஓவைசி!