புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ணாராவை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மூன்றாவது முறையாக சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான விருதை இவர் பெற உள்ளார். இந்த முடிவு தெரிந்தவுடன் அவரது தொகுதியான ஏனாம் பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கடந்த 25 ஆண்டுகளாக தோல்வி இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியதற்காக ஜனவரி 6ஆம் தேதி ஏனாம் மக்கள் முன்னிலையில் வெள்ளி விழாவை கொண்டாட புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், சிறந்த சட்டப்பேரவை உறுப்பினர் விருதை முதலமைச்சர் நாராயணசாமியிடம் இருந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பெறவுள்ளார்.