ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கிருஷ்ணா நேற்று நள்ளிரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் continental hospital மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார். செயற்கை சுவாச கருவிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு வெளிவந்த ’ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - போலீஸ் விசாரணை