மும்பை: இந்தி தொலைக்காட்சி நடிகையான உர்ஃபி ஜாவேத்(25), இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆட்டிவாக இருப்பவர். சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறைகுறையாக ஆடைகளை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
ஃபேஷன் முயற்சி என்ற பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் உள்ளிட்டவற்றாலான உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம். இவர் எந்த ட்ரோலுக்கும் அசராமல் தனது வேலையை செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல் வந்ததாக உர்ஃபி ஜாவேத் கோரேகான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாட்ஸ்அப்பில் ஆபாசமான வார்த்தைகளில் திட்டியும், கொலை- கற்பழிப்பு மிரட்டல் விடுத்தும் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து குறுஞ்செய்திகளும், அழைப்புகளும் வந்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நவீன் கிரி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுபான பாரில் ரகசிய அறை.. 17 இளம்பெண்கள் மீட்பு.. 25 பேர் கைது..