மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், சின்னார் (Sinnar) என்ற கிராமத்தில், ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் ஊர் பெரியவர்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை, அவரது கணவரிடமிருந்து சட்டவிரோதமாக பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது.
அஸ்வினியின் ஒப்புதலின்றி கணவரை பிரித்தது மட்டுமல்லாமல், அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. தான் இல்லாதபோது கட்ட பஞ்சாயத்து செய்து, கணவரையும் தன்னையும் பிரித்துவிட்டார்கள் என்றும், 8 நாள்களுக்கு முன்பு கணவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட அஸ்வினி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது, தன்னை துன்புறுத்தினார்கள் என்றும், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கக்கூடாது என தனக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், தனது மாமனார்-மாமியார் மற்றும் பஞ்சாயத்து செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்வினி கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரை, போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.