மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டம் மஹைசல் கிராமத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகளவு கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும், கடன் தொல்லை காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்களில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டெடுப்பு