புதுச்சேரி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் பாரதி பூங்காவில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குப் பாரதியார் பாடல்கள் இசைக்கக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.