இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 74 பேர் பாதிப்படைந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், சங்லி மாநிலத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் என உறுதியளித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரெய்காத், ரத்னகிரி மாவட்டங்களுக்கு அவசர கால நிதியாக 2 கோடி ரூபாய் வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சங்லி, சடரா, புனே, கோலாபூர், தானே உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா