மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என தன்னை வற்புறுத்தியதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தவிட்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து புதிய உள்துறை அமைச்சராக திலீப் வாஸ்லே பாட்டில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மகாரஷ்டிரா உள்துறை திலீப் குமார் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அனில் தேஷ்முக்கும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’கர்மாவிடமிருந்து எவரும் தப்ப முடியாது’ - ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் மீண்டும் தாக்கு