ETV Bharat / bharat

அரை மணி நேரத்தில் 25 பேரை கடித்த தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்! - ஹரித்வாரின் கோட்வாலி

தெருநாய் ஒன்று அரை மணி நேரத்தில் 25 பேரை கடித்த விநோத சம்பவம் ஹரித்வாரில் நடந்துள்ளது.

dog
dog
author img

By

Published : Jun 23, 2022, 5:29 PM IST

உத்தரகாண்ட்: ஹரித்வாரின் கோட்வாலி பகுதியில் நேற்று (ஜூன் 22) காலை தெருநாய் ஒன்று, சாலையில் நடந்து சென்ற அனைவரையும் கடிக்கத் தொடங்கியுள்ளது.

வெறி பிடித்து அங்குமிங்கும் ஓடிய நாய் கண்ணில் பட்ட அனைவரையும் கடித்துள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர். நாய் கடித்ததால் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவமனையிலும் பரபரப்பு நிலவியது.

வெறிபிடித்து களியாட்டம் ஆடிய தெருநாய் அரை மணி நேரத்தில் 25 பேரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நாயைக் கட்டையால் அடித்துக்கொலை செய்தனர்.

ஹரித்வாரில் இதுபோன்ற தெருநாய்கள் பல இடங்களில் சுற்றித்திரிவதாகவும், நாய் கடித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை - நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.