ஆயிரத்தை தாண்டிய கேஸ் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! - ஆயிரத்தை தாண்டிய கேஸ் விலை
இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூ 50 அதிகரித்து ஆயிரம் ரூபாயை எட்டியது. இது பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எரிவாயு பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே எரி பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இது நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று (மே 6) திடீரென இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் பிரதான எரிவாயு சிலிண்டர் விலை ரூ50 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ 1,015 ஆக உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்ரின் விலை 100 ரூபாய் அதிகரித்து ரூ2,355.50 ஆக விற்கப்படுகிது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை