ETV Bharat / bharat

ராமேஸ்வரத்தில் பிரமாண்ட ஹனுமன் சிலை- பிரதமர் அலுவலகம் தகவல்! - ஹனுமன் ஜெயந்தி 2022

ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமன் சார்தாம் (Hanumanji Char Dham) திட்டத்தின் படி ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம் (2010-வடக்கு) மற்றும் குஜராத் (2022-மேற்கு) ஆகிய இடங்களில் ஹனுமன் சிலைகள் அமைக்கப்பபெற்றுள்ளன.

Lord Hanuman statue
Lord Hanuman statue
author img

By

Published : Apr 16, 2022, 2:17 PM IST

புது டெல்லி: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு குஜராத்தில் 108 அடி உயர ஸ்ரீ ராம தூதன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக டெல்லியில் இருந்தபடி இன்று (ஏப்.16) திறந்துவைத்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்து ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “வடக்கில் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் 2010ஆம் ஆண்டிலும், மேற்கில் குஜராத்தின் மோர்பியிலும் ஹனுமன் சிலைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன.

அடுத்து தெற்கில் ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனுமன் சார்தாம் (Hanumanji Char Dham) திட்டத்தின்படி நாட்டின் 4 மூலைகளிலும் ஸ்ரீ ராம தூதன் ஹனுமனுக்கு சிலைகள் அமைக்கும் பணிமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு ஹனுமன் ஜெயந்தி ஏப்.16 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத் தனது வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் ஹனுமன் ஜெயந்தி வாழ்த்துகள். ராம தூதன் மாருதி நந்தன் பஜ்ரங்பலியின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆசிர்வாதம் மற்றும் உடல்நலன் கிடைக்கட்டும். ஓம் ஹனுமந்தே நமஹ” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குஜராத்தில் 108 அடி உயர ஹனுமன் சிலை திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.