ETV Bharat / bharat

தங்க நகைக்கடன் நிறுவனத்தில் 24 கிலோ தங்க நகைகள் கொள்ளை... பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு... - சிசிடிவி காட்சிகள்

ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் தங்க நகைக்கடன் நிறுவனத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loot
loot
author img

By

Published : Aug 29, 2022, 9:57 PM IST

Updated : Aug 29, 2022, 10:05 PM IST

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில், பிரதாப்நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கநகைக்கடன் அலுவலகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி அணிந்த 5 நபர்கள் அலுவகத்திற்குள் புகுந்து, துப்பாக்கி முனையில், சுமார் 24 கிலோ தங்க நகைகள் மற்றும் 11 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சிசிடிவியில், கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து, ஊழியர்களின் செல்போன்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களை தாக்கி கொள்ளையடித்து, பிறகு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்க நகைக்கடன் நிறுவனத்தில் 24 கிலோ தங்க நகைகள் கொள்ளை... பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

இதையும் படிங்க: குடும்ப தகராறில் மனைவி, மகள், மாமியாரை கத்தியால் குத்திய நபர் கைது

Last Updated : Aug 29, 2022, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.