டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (பிப்.11) நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். அப்போது, “நேற்று (பிப்.10) பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேசமாட்டார்கள். நான் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள், உள்கருத்துகள் பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்திய அரசின் முதல் விவசாய சட்டம் விவசாய சந்தைகளை ஒழித்து கட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டாவது சட்டம், பழங்கள், காய்கறிகள் என அனைத்து விவசாயப் பொருள்களையும் பெருநிறுவன முதலாளிகள் தேவைக்கு அதிகமாக சேமித்துவைக்க இடமளிக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன தேவையை அதை பதுக்குவார்கள்.
மூன்றாவது சட்டம் என்ன கூறுகிறது தெரியுமா? நமது விவசாயிகள் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களிடம் அடிப்படை ஆதார விலைக்காக கை ஏந்த வேண்டும். விவசாயிகள் நீதிமன்றம் செல்ல அனுமதியில்லை.
அந்த வகையில் புதிய சட்டங்கள் நாட்டில் பசி பட்டினி, வேலையின்மை, தற்கொலையை அதிகரிக்க வல்லவை” என்றார். மேலும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இது விவசாயிகளின் போராட்டம் அல்ல, நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்” கூறினார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்தாண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எந்தப் பெண்ணும் ராகுலை திருமணம் செய்ய விரும்பவில்லை... ஆனால் அவருக்கு... பாஜக எம்பி!