புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் மதுக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை அறுவை நிலையங்களும் பல்வேறு அங்காடிகளில் அமைந்துள்ள ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி நிலையங்களும், மீன் கடைகளும் வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 28ஆம் தேதி வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தினத்தை முன்னிட்டு முழு நாள் மூடப்பட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.