புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் எதிரே சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் நகரும் கழிவறை, அழகுப்படுத்தப்பட்ட இருக்கைகள் ஆகியவற்றை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் திறந்துவைத்தார்.
பின்னர் பேசிய தமிழிசை, “குழந்தைகளுக்குச் சத்துணவாக கேழ்வரகு மட்டும் போதாது என்பதால் வாரத்தில் மூன்று முட்டைகள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குச் சத்துணவுத் தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தவுள்ளோம்.
புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் அறிவித்தாலும் முடங்கிக்கிடந்த திட்டங்களைத் தொடர நடவடிக்கை எடுத்துவருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த திமுக!