ETV Bharat / bharat

பாரத் ஜோடோ யாத்திரைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை! - ஒருவர் கைது

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

letter
letter
author img

By

Published : Nov 18, 2022, 8:50 PM IST

இந்தூர்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவில் பயணித்து வரும் நிலையில், வரும் 20ஆம் தேதி மத்தியப்பிரதேசத்தில் நுழையவுள்ளது. இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஒரு கடையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. அதில், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பவர்கள் நவம்பர் 28ஆம் தேதி உள்ளூர் மைதானத்தில் தங்கினால், குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இந்தூர் காவல் துறை ஆணையர் மிஸ்ரா, "ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பவர்கள் கல்சா மைதானத்தில் தங்கினால் குண்டு வெடிப்பு நடத்தப்படும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூனி பகுதியில் உள்ள இனிப்பு கடைக்கு நேற்று(நவ.17) மாலை இந்த கடிதம் வந்துள்ளது.

ராகுல் காந்தியை குறிவைப்பது போல நேரடியாக கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இதுதொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் இது புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்றார்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாரத் ஜோடோ யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் செயலாளர் நீலப் சுக்லா வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: படித்த பெண்கள் லிவிங் டுகெதரில் இருக்கக்கூடாது - மத்திய இணை அமைச்சர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.