ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்பு படையினரால் திங்கள்கிழமை (ஏப்.11) கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், வடூர பாலா, சன்வானி பாலம் அருகே காவல்துறை, ராணுவத்தின் 22 ஆர்ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியோரால் சிறப்பு சோதனைச் சாவடி அமைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க : சூதாட்டக்காரர்களின் கூடாரமான பிகாரின் கஜூராஹோ கோயில்!