உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்த எஸ்.ஏ. பாப்டே நேற்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு உச்ச நீதிமன்றம், பார் கவுன்சில் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேனுகோபால், பார் கவுன்சில் தலைவர் விகாஸ் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நன்றியுரையாற்றி பாப்டே பேசியதாவது, மகிழ்ச்சி, நிறைவு, நல்லெண்ணம், நெகிழ்ச்சியான நினைவுகளுடன் நான் உச்ச நீதிமன்றத்திலிருந்து விடைபெறுகிறேன். இறுதி நாளான இன்று என் உணர்வுகளை வார்த்தையால் வெளிப்படுத்த முடியவில்லை.
நீதியை நிலைநாட்ட என்னால் இயன்ற சிறப்பான பங்களிப்பை தந்துள்ளேன். என்னுடன் பணியாற்றிய சகாக்களும் இதற்கு உறுதுணையாக நின்றார்கள். கோவிட்-19 என்ற அசாதாரண காலத்தில் பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. காணொலி வாயிலாக விசாரணை செய்தது புது அனுபவம்.
உச்ச நீதிமன்றத்தில் எனது 21 ஆண்டு சேவைக் காலம் நிறைவடைகிறது. நான் விட்டுச் செல்லும் பணியை புதிய தலைமை நீதிபதி ரமணா சிறப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இதையும் படிங்க: வெளியே சென்று காதலியை பார்க்க வேண்டும்... காதலனின் கேள்வியும் மும்பை காவல் துறையின் அசத்தலான பதிலும்!