லக்கிம்பூர்: உத்தரப் பிரசேதம் மாநிலம் லக்கிம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுகிழைமை (அக். 3) நடைபெற்ற வன்முறையில் நான்கு விவசாயிகள், ஒரு செய்தியாளர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, நவ்ஜோத் சிங் சித்து விவசாயிகள், செய்தியாளர் உயிரிழப்புக்கு நீதிவேண்டியும், உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று (அக். 8) தொடங்கினார்.
சித்துவின் தொடர் போராட்டம்
இதைத்தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா குற்றவியல் விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்தார். மேலும், செய்தியாளர் லவ்பிரீத் சிங் குடும்பத்தினரோடு நீர் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
வியாழக்கிழமை (அக். 7) லக்கிம்பூர் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, அவரின் ஆதரவாளர்கள் ஆகியோரை ஹரியானா - உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தி காவலர்கள் தடுப்புக்காவலில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆரியன் கான் விவகாரம்: மூவர் விடுதலை குறித்து கேள்வியெழுப்பிய நவாப் மாலிக்