ETV Bharat / bharat

லக்கிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்ப்பு! - லக்கிம்பூர் கேரி வன்முறை குற்றப்பத்திரிகை

லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாராகியுள்ளது.

Ashish Mishra
Ashish Mishra
author img

By

Published : Jan 3, 2022, 5:23 PM IST

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அக்டோபர் 3 (2021), போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின்போது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி இருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொலி காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக குற்றப்பத்திரிகை வெளியாகியுள்ளது. மொத்தம் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸ் உறவினர் அங்கித் தாஸ் ஆகியோர் உள்பட 13 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை கமிஷன் அமைத்தது. மேலும் விசாரணையை துரிதமாக நடத்தவில்லை என உத்தரப் பிரதேச அரசு மீது அதிருப்தி தெரிவித்தது.

லக்கிம்பூர் கேரி வன்முறையில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர், இரண்டு பாஜக தொண்டர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் கொல்லப்பட்டார். சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கிட்டத்தட்ட ஓராண்டாக தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில் அந்தச் சட்டங்களை அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வாபஸ் பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : 'விவசாயிகள் மரணம், பிரதமர் மௌனம்'- சிவசேனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.