உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில், விவசாயிகள் உள்ளிட்ட எட்டுபேர் கார் ஏற்றி கொல்லப்பட்டனர்.
இதில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை முக்கிய குற்றவாளியாகக் கூறி வழக்குப் பதிந்து அம்மாநில காவல்துறை கைது செய்யதது. இந்த வழக்கில் பிணை கேட்டு ஆஷிஷ் மிஸ்ரா ஏற்கனவே மனு தாக்கில் செய்தார்.
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் பிணை மறுத்த நிலையில், இரண்டாவது முறையாக பிணை மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை மாவட்ட நீதிமன்றத்தின் முன் வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி மோனா சிங், வாதிக்கு பிணை வழங்க போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலணாய்வு குழு, சம்பவம் ஒரு விபத்து அல்ல.
திட்டமிட்ட சதி எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவின் அடுத்த தடுப்பூசி 'கோவோவாக்ஸ்'-க்கு WHO அனுமதி