உத்தரப்பிரதேசம்: லக்கிம்பூர் என்ற இடத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வந்த கார், விவசாயிகளின் கூட்டத்திற்குள் புகுந்ததில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவர் உட்பட 13 பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது லக்கிம்பூர் நீதிமன்றத்தில் நேற்று (டிச.6) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சட்டத்துக்கு புறப்பாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் 16 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என கூடுதல் மாவட்ட நீதிபதி சுனில் குமார் வர்மா தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு சென்று திரும்பியபோது விபத்து: 6 பேர் உயிரிழப்பு