உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் போராட்டக்காரர்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
ஓய்வு பெற்று நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கின் விசாரணை நடத்திவருகிறது. இந்த சிறப்பு குழு தனது விசாரணையை அறிக்கையை நீதிமன்றம் முன் சமர்பித்தது.
அதில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனவும், கவனக்குறைவு காரணமாகவோ, தவறுதலாகவோ இது நடைபெறவில்லை என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேர் மீது கொலை உள்ளிட்ட புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிய வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
விசாரணை குழுவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஆறு மாதத்தில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி - அதர் பூனாவாலா