திருவனந்தபுரம்: கேரள பானங்கள் கழகம் (BEVCO) மதுபானங்களின் விலையை 7 சதவிகிதம் உயர்த்த அரசு அனுமதி வேண்டி காத்திருக்கிறது.
கேரள அரசு இந்த பரிந்துரைக்கு அனுமதி அளித்தால், அங்கு மதுபானங்களின் அடிப்படை விலையே 100 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் மதுபான தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் அடைவார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு பெவ்கோ மதுபானங்களின் விலையை உயர்த்தியது. அதன்பிறகு மதுபான தயாரிப்பாளர்கள் தொடர்ந்து விலையை உயர்த்த கோரிக்கை வைத்தனர். ஆனால், கேரள அரசு அதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்த காரணத்தால் பெவ்கோவுக்கு மதுபானங்கள் வழங்கும் அளவை மதுபான தயாரிப்பாளர்கள் கணிசமாக குறைத்தனர். தற்போது மீண்டும் மதுபான விலையை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளனர். இந்த முறையும் விலையை உயர்த்தாவிட்டால் இழப்பை சமாளிக்க முடியாது என பெவ்கோவிடம் தெரிவித்துள்ளனர். எனவே பெவ்கோ சார்பாக கேரள அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.