ETV Bharat / bharat

குடியரசுத்தலைவர் தேர்தல்: கேரளாவின் ஒட்டுமொத்த எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஓட்டைப்பெறும் யஷ்வந்த் சின்ஹா! எப்படி?

கேரளாவில் ஆளும் சிபிஎம் தலைமையிலான கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் தேர்தல்
author img

By

Published : Jun 29, 2022, 6:03 PM IST

திருவனந்தபுரம்: குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அந்தவகையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

இந்தநிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் கேரளாவின் ஒட்டுமொத்த எம்.பி., எம்.எல்.ஏக்களின் வாக்குகளையும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற உள்ளார். ஏனெனில் கேரளாவில் பாஜக தனித்தோ, கூட்டணியிலோ எதிலும் இல்லை.

ஆளும் சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கட்சிக்கு 99 எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கட்சிக்கு 41 எம்எல்ஏக்களும் உள்ளனர். மக்களவையில் காங்கிரஸூக்கு 19 எம்.பி.க்களும், எல்டிஎஃப்க்கு 1 எம்.பி.யும் உள்ளனர்.

அதேவேளையில், மாநிலங்களவையில் கேரளாவிலிருந்து, எல்டிஎஃப் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும், காங்கிரஸைச் சேர்ந்த 2 உறுப்பினர்களும் உள்ளனர். எனவே, சிபிஎம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவிற்கு வாக்களிக்க உள்ளனர்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வெவ்வேறு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது வழக்கம். மற்ற மாநிலங்களில் பாஜக அதன் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் மூலம் ஆதரவைப் பெற்றுள்ளது. கேரளா மட்டும் தான் தனது ஒட்டுமொத்த எம்.பி., எம்.எல்.ஏக்களின் வாக்குகளையும் எதிர்கட்சி வேட்பாளருக்கு செலுத்த உள்ளது.

இந்தநிலையில், யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 29) திருவனந்தபுரத்தில் எல்டிஎஃப் மற்றும் யூடிஎஃப் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.