ETV Bharat / bharat

தி கேரளா ஸ்டோரி எதிரொலி - இஸ்லாமிய நபர் உடனான மகளின் திருமணத்தை ரத்து செய்த பாஜக பிரமுகர் - marriage

உத்தரகாண்ட் பாஜக தலைவர், தனது மகளை இஸ்லாமிய நபருக்குத் திருமணம் செய்து தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜண்டா சவுக் பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பைரவ சேனா, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள், அவரது உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

kerala-story-aftermath-uttarakhand-bjp-leader-cancels-daughters-marriage-to-muslim-man
கேரளா ஸ்டோரி எதிரொலி - முஸ்லீம் நபர் உடனான மகளின் திருமணத்தை ரத்து செய்த பா.ஜ.க. தலைவர்
author img

By

Published : May 21, 2023, 10:53 AM IST

பவுரி (உத்தரகாண்ட்): ’’இந்து அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, இஸ்லாமிய நபருடனான தனது மகளின் திருமணத்தை, ரத்து செய்து உள்ளதாக”, உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும், பவுரி நகராட்சித் தலைவருமான யஷ்பால் பினாம் தெரிவித்து உள்ளார். மகளின் சந்தோஷத்திற்காக, இந்த திருமணத்திற்குத் தான் சம்மதம் தெரிவித்து இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

மே 28ஆம் தேதி திருமணம் நடக்க இருந்ததை ஒட்டி, ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வந்தன. திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதற்கு எதிர்மறையாகவே அதிகளவில் கருத்துகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், இந்த திருமண நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து அமைப்புகள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வந்தன. தனது உருவப் பொம்மையை எரிக்கும் அளவிற்கு, விஷயம் கைமீறிச் சென்ற நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த யஷ்பால் பினாம் கூறியதாவது, ’’நான் பொதுமக்களின் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பவன். மகளின் சந்தோஷத்திற்காக, இந்த திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தேன். தற்போது அதை திரும்பப் பெற்று, இந்த திருமணத்தை, ரத்து செய்து உள்ளேன்” என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த திருமண நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஷ்வ ஹிந்து பரிஷத், பைரவ சேனா, பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயல் தலைவர் தீபக் கவுட், ''இதுபோன்ற திருமண நிகழ்வுகளை, தாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

சமீபத்தில் வெளியான ’தி கேரளா ஸ்டோரி’ படத்தில், ஒரு இஸ்லாமியப் பெண், 3 இந்து பெண்களை மதமாற்றம் செய்வதோடு மட்டுமல்லாது, அவர்களை, பயங்கரவாத அமைப்பிலும் சேர்ப்பதாக கதை வடிவமைக்கப்பட்டு இருந்தது. நாட்டின் ஆங்காங்கே சில பகுதிகளில், இந்தப் படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பி இருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி பிரமுகரே, தனது மகளை, இஸ்லாமிய நபருக்கு திருமணம் செய்ய ஒப்புதல் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திருமணம், தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Karnataka Cabinet : சொன்ன சொல் மீறாத காங்கிரஸ்... 5 வாக்குறுதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.