திருவனந்தபுரம்: இது குறித்து கேரள கல்வித் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன அழுத்தம், உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, பெற்றோர், கல்வியாளர்கள் பள்ளிகளைப் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைத்து வருகின்றனர்.
மத்திய அரசு, மருத்துவக் குழுவினரின் ஒப்புதலுக்குப் பின்னரே பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்படும். இதற்காகப் பள்ளி, கல்லூரிகள் எனத் தனித்தனியாகப் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
குறிப்பாக ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓணம்: கேரளாவில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு