ETV Bharat / bharat

கேரளாவில் உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

author img

By

Published : Jul 19, 2022, 3:55 PM IST

கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற பெண் அலுவலர்கள் நிர்பந்தித்தாக மாணவி அளித்தப்புகாரின் அடிப்படையில் இரண்டு பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் மீது போலிஸ் வழக்குபதிவு

கொல்லம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேர்வு மையத்திற்குள் செல்லும் முன்பு, தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுவர். பெண் தேர்வர்கள், மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக்கொண்டு சோதனை செய்யப்படுவர்.

இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தேர்வெழுதச்சென்றுள்ளார். அவரை சோதனை செய்த பெண் அலுவலர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மெட்டல் டிடெக்டர் சோதனையின்போது அவரது உள்ளாடையை கழற்ற நிர்பந்தம் செய்துள்ளனர். கழற்றிய பிறகே தேர்வுக்கு அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மாணவி பெண் அலுவலர்களின் நடவடிக்கையால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என்றும் காவல் துறையிடம் புகார் அளித்தார்.

மேலும், தனக்கு மட்டுமல்லாமல் ஏராளமான பெண்களின் உள்ளாடைகளைக் கழற்ற வைத்தார்கள் என்றும், தேர்வு முடிந்து வந்து பார்த்தபோது அட்டைப்பெட்டி முழுவதும் உள்ளாடைகள் இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாங்கள் சோதனை செய்யவில்லை என்றும், மெட்டல் டிடெக்டர் சோதனை வெளியாட்கள் மூலமே நடத்தப்பட்டது என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மாணவி அளித்தப் புகாரின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட இரண்டு பெண் அலுவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 (பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் வற்புறுத்துவது) மற்றும் 509 (பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படுவது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கேரள மாநில மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. விசாரணை செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாடையை கழற்றச்சொல்லி நிர்பந்தித்த அலுவலர்கள் - நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.