ETV Bharat / bharat

"எம்.பி தேர்தலில் அல்ல, கேரளாவில்தான் கவனம்" - சசி தரூரின் கருத்துக்கு காங்கிரஸார் கண்டனம்! - கேரளாவில் கவனம் செலுத்தும் தரூர்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், கேரளாவில் கவனம் செலுத்தப்போவதாகவும் ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

kerala
kerala
author img

By

Published : Jan 13, 2023, 10:12 PM IST

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தோல்வி அடைந்தார். இத்தேர்தலில் தொடக்கம் முதலே கட்சியின் மூத்த நிர்வாகிகள் சசி தரூருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், கேரளாவில் இளைஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். கேரள காங்கிரஸில் முக்கிய பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சசி தரூர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதேநேரம், தற்போது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி முழு வீச்சில் தயாராக வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சசி தரூர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கேரள முதலமைச்சராக போட்டியிடத் தயாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சசி தரூர், 'கட்சித் தலைமை முடிவு செய்தால், கேரள முதலமைச்சராகப் போட்டியிடத் தயார்' என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், கேரளாவில்தான் கவனம் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டார். சசி தரூரின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யார் என்ன ஆவார்கள் என்று இப்போது யாரும் விவாதிக்க வேண்டாம் என்றும், பதவியை எதிர்பார்த்து யாராவது கோட் தைத்திருந்தால், அதை இப்போதே அகற்றிவிடலாம் என்றும் தெரிவித்தார். இப்போதைக்கு அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் நல்லது என்றும் சென்னிதலா கூறினார்.

மூத்த தலைவர் கே.முரளிதரன் கூறும்போது, "கட்சியில் பேச வேண்டியவற்றை கட்சிக்குள்தான் பேச வேண்டும், வெளியே அல்ல. நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் நோக்கம். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறவில்லை என்றால், இன்னொரு தேர்தலைப் பற்றி யோசிக்க முடியாத நிலை கூட உருவாகலாம். காங்கிரஸ் மேலிடம்தான் வேட்பாளர்களை முடிவு செய்யும்" என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் சசி தரூருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், 'கட்சியில் உள்ள தலைவர்கள் ஏதாவது பேச விரும்பினால் கட்சிக்குள் விவாதிக்க வேண்டும், வெளியே விவாதத்தை உருவாக்க வேண்டாம்' என்றார்.

இதையும் படிங்க: Joshimath Sinking: புதையும் இமயமலை நகரங்கள்.. இது வெறும் தொடக்கம் தான்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.